புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2016

திருநாவுக்கரசரை நியமிக்க எதிர்ப்பு: 39 மாவட்ட தலைவர்கள் சோனியா, ராகுலுக்கு கடிதம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்ததையடுத்து, அந்தப் பதவியை பிடிக்க கட்சிக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் பரிசீலனை பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் பெயரும் இடம் உள்ளதாக கூறப்படுகிறது. அவரை தலைவராக நியமிக்கக்கூடாது என்று மாவட்ட தலைவர்கள் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

இது குறித்து தமிழக காங்கிரசின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் என்.ரங்கபாஷ்யம், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்கள் வி.ஆர்.சிவராமன், ஆர்.சுந்தரமூர்த்தி, திருவள்ளூர் மாவட்ட தலைவர்கள் ஏ.ஜி.சிதம்பரம், பாலமுருகன் உள்ளிட்ட 39 மாவட்ட தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைதலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் சந்திக்க உள்ளோம். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இதுவரை யாரையும் நியமனம் செய்யாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டு காலம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் வீழ்ந்து கிடந்த காங்கிரஸ் இயக்கத்தை எழுச்சியோடு அரசியல் பயணம் செய்வதற்கு நாங்கள் ஆற்றிய பணியும், எங்களை அவர் இயக்கிய விதமும் அளப்பறியது மட்டுமல்ல, இப்படிப்பட்ட சூழலில் கடந்த சில நாட்களாக தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சு.திருநாவுக்கரசர் பெயர் பரிசீலிக்கப்படுவதாக வரும் செய்தி எங்களை அதிர்ச்சியடைய வைக்கிறது. திராவிட சிந்தனையோடு பயணித்தவரும், மதவாத இயக்கத்தில் பயணித்தவரும், தமிழக அரசியல் வரலாற்றில் எந்த தலைமைக்கும், இயக்கத்திற்கும் விசுவாசத்தோடு பணியாற்றிதாக வரலாறு பதிவு செய்யாதவரும், சுயநலத்தோடு தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்கின்ற ஒருவருக்கு காமராஜர் வளர்த்த இந்த இயக்கத்திற்கு தலைமை பதவி தரப்படுமானால் இது காமராஜருக்கு செய்கின்ற துரோகமாகும். தேசிய சிந்தனையாளர்கள் யாரும் இவருடைய அரசியல் பயணத்தை ஏற்க தயாராக இல்லை என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

தமிழக காங்கிரசையும் அதன் மாசில்லா தொண்டர்களையும் அரவணைத்து செல்கின்ற தலைமை தான் தேவை என்பதை நாங்கள் பணிவோடு வலியுறுத்துகிறோம். மேலும் விரைவில் சந்திக்க இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலிலும், 2019ம் ஆண்டு சந்திக்க இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி வியூகத்தை அமைக்க வேண்டுமாயின், எந்த கட்சியிலும் நம்பகத்தன்மை இல்லாது பணியாற்றிய திருநாவுக்கரசர் போன்றவர்களின் கரங்களில் காங்கிரஸ் தலைமை சென்று விடக்கூடாது என்ற எங்களின் உணர்வினை எங்களின் ஒப்பற்ற மேலிடத்திற்கு தெரிவிப்பது எங்கள் கடமையாக கருதுகிறோம். காங்கிரஸ் இயக்கத்திற்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரின் ஒப்பற்ற தலைமைக்கும், நம்பிக்கைக்கும், விசுவாசமும் ெகாண்டவரும், தேசிய உணர்வாளர் ஒருவரை தலைவராக நியமித்தால், காங்கிரஸ் வலுப்பெற நாங்கள் என்றைக்கும் எதையும் எதிர்பாராமல் பணியாற்றுவோம். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் எங்கள் உணர்விற்கு மதிப்பளிப்பார் என நம்புகிறோம். இவ்வாறு கடிதத்தில் கூறப்படுகிறது.

ad

ad