புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2016

போலீசார் வந்தபோது நடந்தது என்ன? செயல்வடிவமாக நடித்துக் காட்டிய ராம்குமாரின் தந்தை

சுவாதி கொலையில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராம்குமார். இவரது தந்தை பரமசிவத்தை நெல்லை மாவட்டம், மீனாட்சிப்புரத்தில் சந்தித்தனர் ராம்குமாரின் வழக்கறிஞர்கள் ராம்ராஜ், ரவீந்திரன் குழுவினர். 

அப்போது ராம்குமாரை ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு கைது செய்ய வந்தபோது, போலீசார் எப்படி நடந்து கொண்டனர். ராம்குமார் எந்த நிலையில் இருந்தார் என்பது குறித்து வழக்கறிஞர்களிடம் ராம்குமார் தந்தை நடித்து காண்பித்தார். ராம்குமாரின் தாயும், சகோதரியும் வழக்கறிஞர்களிடம் நடந்தவைகளை கூறி விளக்கினர்.

பின்னர் வழக்கறிஞர்களோடு ராம்குமாரின் தந்தை இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், எனது மகன் ராம்குமார், தனக்கு தானே கழுத்தை அறுத்துக்கொள்ளவில்லை. போலீசார்தான் செய்திருக்க வேண்டும் என்கிற சந்தேகம் எனக்கு உள்ளது. ராம்குமார் பிடிபட்டத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் நாங்கள், சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்றார்.

இதைத் தொடர்ந்து ராம்குமார் வழக்கறிஞரான மார்க்ஸ் ரவீந்திரன், சுவாதிக்கும், ராம்குமாருக்கும் பேச்சு பழக்கம் உண்டு என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. ராம்குமாரை ஜெயிலில் சந்தித்த நான், அவரது பேஸ்புக் பாஸ்வேர்டை வாங்கிவந்து சரிபார்த்தேன். அவர்கள் சொன்னதுபோல் எதுவும் இல்லை. கொலை நடந்தவுடன் ஒரு பைக்கில் ஏறி ராம்குமார் தப்பிச் சென்றார் என கூறுகின்றனர். அந்த பைக்கை ஓட்டி வந்தது யார் என்பது பற்றியும் போலீசார் சரியாக விசாரிக்க வில்லை. ராம்குமாரின் நண்பரான சூர்ய பிரகாஷ் என்பதை பற்றியும் போலீஸ் விசாரிக்கவில்லை. ராம்குமார் நீதிமன்ற காவலில் இருந்ததால், மன அழுத்தம், வேதனையில் அவரிடம் வாங்கிய ஸ்டேட்மண்டை எடுத்துக்கொள்ளக் கூடாது என்றனர்.

ad

ad