புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2016

யாழ் பல்கலை மோதல் சம்பவம் சிங்கள அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் வரவேற்பு நிகழ்வில். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, சிங்கள அதிகாரி ஒருவர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

“யாழ். பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு  மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் உயர் பதவிவகிக்கும் சிங்கள அதிகாரி ஒருவர் இந்தக் குழுவின் தலைவராக இருப்பார். ஏனைய இருவரும் யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழர்களாவர்.

இந்தக் குழுவினர் நடத்தும் விசாரணைகளுக்கு அமைய மோதல்களைத் தூண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

நாளை முதல் படிப்படியாக பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும். நாளை மருத்துவ பீடத்தின் சித்தமருத்துவ பிரிவின் பயிற்சிகளும், விஞ்ஞானபீடம் மற்றும் மருத்துவ பீடங்களின் பரீட்சைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மாணவர்கள் தயக்கமின்றி கல்விச் செயற்பாடுகளில் வந்து பங்கேற்கலாம். ஊடகங்களில் வெளியாகும் சில செய்திகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.

இவ்வாறானதொரு சம்பவம் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

ad

ad