புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2016

மஹிந்தவுக்கு மைத்திரி கொடுக்கவுள்ள அதிர்ச்சி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களுக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது
என்ற நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ளார் என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மஹிந்த சார்பு அணி, மைத்திரி சார்பு அணி என இரண்டு அணிகள் காணப்படுவதால் சு.கவின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை அரசியல் விமர்சகர்களால் முன்வைக்க முடியாதுள்ளது.
சு.கவில் அங்கம் வகிக்கும் மைத்திரி தலைமையிலான அணி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹிந்த ஆதரவு அணியினருக்குத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது எனத் தீர்மானித்துள்ளது.
மஹிந்தவின் ஆதரவாளர்கள் மைத்திரியின் தீர்மானத்திற்கு எதிராச் செயற்படுவதன் காரணமாகவே மைத்திரி அதிருப்தியடைந்து இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைகளில் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சார்பான உறுப்பினர்களே அதிகம் இருந்தனர். இந்நிலையில், இவ்வாறு மைத்திரி தரப்பு தீர்மானம் எடுத்திருப்பது வெளிப்படையாகும் பட்சத்தில் அரசியல் அரங்கில் பல்வேறு அதிர்வலைகள் தோன்றும். இந்த விடயம் புதிய கட்சியை ஆரம்பிக்கும் நிலைப்பாட்டில் உள்ள மஹிந்தவின் சகோதரர் பஸில் ராஜபக்ஷவுக்குத் தீனி போடுவதாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்

ad

ad