புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2016

நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்றைய
தினம் கொழும்பு புறக்கோட்டை நீதவான் லங்கா டி ஜயரத்னவினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச, கிறிஸ் நிறுவனம் ரக்பி விளையாட்டுக்காக வழங்கிய நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டிற்காக கடந்த 11 ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலை பாதுகாவலர்களால் இன்று திங்கட்கிழமை காலை அழைத்துவரப்பட்டு கொழும்பு புறக்கோட்டை நீதவான் நீதிமன்றில் முனிலைப்படுத்தப்பட்டார்.
இதற்கமைய அவர் மீதான 70 மில்லியன் ரூபா மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டு குறித்த வழக்கை விசாரித்த புறக்கோட்டை நீதவான் லங்கா டி சில்வா, அவரை 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் தலா ஐந்து இலட்சம் ரூபா 3 சரீரரப் பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
அதேவேளை, வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்த நீதவான், அடுத்த விசாரணையை ஓகஸ்ட் எட்டாம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கொழும்பு கோட்டை டிரான்ஸ்வேல்ட் சதுக்கத்திற்கு அருகில் 4.3 ஏக்கர் காணியை 99 வருட குத்தகைக்கு எடுத்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பொன்றையும், நட்சத்திர விடுதியொன்றையும் நிர்மாணித்து வருகின்றது.
இந்த காணியை குறித்த நிறுவனத்திற்கு பெற்றுக்கொடுத்ததாகக் கூறப்படும் நாமல் ராஜபக்சவின் வேண்டுகொளுக்கு இணங்க கிறிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் குப்தா என்பவர் ரக்பி விளையாட்டின் முன்னேற்றத்திற்காக வழங்கிய 70 மில்லியன் ரூபா நிதி மாயமான சம்பவத்திற்காகவே நாமல் பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்
இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச,  இன்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்த கொழும்பு புறக்கோட்டை நீதவான் நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்படும் வரையிலான நிக்வுகளை அவரது நண்பர்கள், சமூக வலைத்தளமான முகப்புத்தகம் ஊடாக நேரடி ஒளிபரப்பும் செய்தனர்.
கடந்த 11 ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பரிவினரால் நாமல் கைதுசெய்யப்பட்டு புறக்கொட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டபோதும் நாமல் ராஜபக்சவின் சகாக்கள் அந்த நிகழ்வுகளை முகப்புத்தகம் ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

ad

ad