புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2016

பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதியில் வேல்ஸ்

ரோப்பிய கால்பந்து தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட, பெல்ஜியம்
அணி 3-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியிடம்  படுதோல்வி கண்டு தொடரை விட்டு வெளியேறியது.
இந்த ஆட்டத்தில் 13வது நிமிடத்தில்  பெல்ஜியம் அணி முதல் கோல் அடித்தது. சுமார் 30 அடி தொலையில் இருந்து ரட்ஜா நங்லோன் அடித்த பந்து புல்லட் வேகத்தில் சென்று  வலைக்குள் சென்று புகுந்து கொண்டது. வேல்ஸ் வீரர் ஆஸ்லே வில்லியம்ஸ் 30 வது நிமிடத்தில் கார்னர் கிக்கை தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் ஆட்டம் சமநிலையடைந்தது. 

பிற்பாதியில் 55வது நிமிடத்தில் ராப்சன் கானு வேல்ஸ் அணிக்கான 2வது கோலை அடித்தார். இதனால் அந்த அணி முன்னிலை பெற்றது. பின்னர் ஆட்டம் முடியும் தறுவாயில்  சாம் வாக்ஸ் தலையால் முட்டி ஒரு கோல் அடிக்க, இறுதியில் வேல்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. 

இதற்கு முன் கடந்த கடந்த 1958ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் காலிறுதியில்  வரை வேல்ஸ் முன்னேறியிருந்தது. .அரையிறுதியில் வேல்ஸ் அணி போர்ச்சுகல் அணியை எதிர்கொள்கிறது.

ad

ad