புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2016

5300 கோடி ரூபா நிதி மோசடி கண்டுபிடிப்பு

நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்குக் கிடைக்கப் பெற்ற 52 முறைப்பாட்டுக் கடிதங்கள் தொடர்பில்  இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் 5300 கோடி ரூபா நிதி மோசடி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எப்.சி.ஐ.டி. யிற்கு இதுவரையில் 306 முறைப்பாட்டுக் கடிதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் 52 கடிதங்ளே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு நிறைவு செய்யப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பான அறிக்கைகள் சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் 11 விடங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் பாரிய குற்றச்சாட்டுக்களுக்கான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சி.என்.என். தொலைக்காட்சி சேவையில் அரசுடமையாக்கப்பட்ட 15 கோடி ரூபா நிதியும், இதில் உள்ளடங்குபவையாகும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்

ad

ad