புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2016

தமிழ் அரசியல் கைதிகளுக்கு உடனடியாக பொது மன்னிப்பு வழங்கமுடியாது-அமைச்சர் சுவாமிநாதன்

பொது மன்னிப்பு வழங்குவதற்கென்று ஒரு முறைமை இருக்கின்றது என்று தெரிவித்த மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தமிழ் அரசியல் கைதிகளுக்கு, ஜனாதிபதியினால் உடனடியாக பொதுமன்னிப்பு வழங்கமுடியாது என்றும் தெரிவித்தார். 

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, நேற்று வியாழக்கிழமை பதிலளித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை கையாள்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால், வேறான அரச தரப்பு வழக்குரைஞர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் சிறந்த தொடர்பைப் பேணி, அவர் மூலம் முறைப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டமா அதிபரை நேற்றுப் (புதன்கிழமை) சந்தித்ததேன். அங்கு அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ஷ, ரவூப் ஹக்கீம் ஆகியோரும் இருந்தனர். 

பயங்கரவாததடுப்புச் சட்டத்தின் கீழ், 90 பேருக்கு அதிகமானோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முடியுமானவர்களின் குற்றப்பத்திரத்தில் உள்ள குற்றச்சாட்டுகளை செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர், குறைக்கமுடியும் என தெரிவித்தார். ஆனால், எல்லோருக்குமில்லை. 

குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகளை குறைக்க முடியுமென சில மாதங்களுக்கு முன்னர் சட்டமா அதிபர், குற்றச்சாட்டுப் பத்திரத்தைக் குறைப்பதாகத் தெரிவித்த போதும், பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டமா அதிபர், குற்றச்சாட்டுப்பத்திரத்தைக் குறைத்தால், அதை பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகும் வழக்குரைஞர்கள் ஒத்துக்கொள்ளவேண்டும். 

பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருகிறது. vன்றாலும், விடயங்களைக் கருத்திற்கொண்டு அதனை வழங்கவேண்டும் என்றார். 

ad

ad