புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2016

கிளிநொச்சியில் நேற்று இரவு 120 கடைகள் எரிந்து சாம்பலாகின -படங்கள்

கிளிநொச்சியில் ன்று இரவு 8.00 மணியளவில் 300 கடைகள் கொண்ட கடைத்தொகுதி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது .அதில் 120 கடைகள்
முற்றாக எரிந்து விட்டன .கடைகளின் அழிவிற்கான காரணங்கள் இன்னமும் சரியாக தெரியவில்லை .
0004பற்றி எரிந்தது கிளிநொச்சி சந்தை… கிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்று இரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீ இன்று அதிகாலையே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ ஏற்பட்டதை சிறிது நேரத்தில் அவதானித்தபோதிலும் தீ அணைப்பு சேவை இன்மையால் உடன் கட்டுப்படுத்த முடுயவில்லை. பிரதேச சபையினரின் நீர்த்தாங்கியும் இரணைமடு இராணுவத்தினரின் தீ அணைப்பு இயந்திரம் சுமார் 10 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்தபோதும் தீயை கட்டுப்பனுத்த முடியாமலே போனது . இந்த நிலையில் யாழ். மாநகரசபையின் உதவி கோரப்பட்டது.
யாழ். மாநகரசபையின் தீ அணைப்பு வன்டிகள் 11 மணியை அண்டியே கிளிநொச்சியை அடைந்த்து. இதன்பிற்பாடு சகலரும் முயன்றவேளையில் கடைத்தொகுதியில் தீ வேகமாகப் பரவிக் கொண்டிருந்தமையினால் தீ பரவும் திசையில் உள்ள கடைத் தொகுதியில் இடையில் மூன்று கடைகள் உடைக்கப்பட்டு இடைவெளி ஏற்படுத்தப்பட்டே தீ கட்டுப்படுத்தப்பட்டது.
இதனால் 389 கடைகளையுடைய சந்தையில் 120 கடைகள் முற்றாக நாசமானது.
இதனால் சுமார் 50 கோடிரூபா சொத்துக்கள் எரிந்தே நாசமாகியது. தீ ஏற்பட்டதற்கான காரணம்
உடன்கண்டறியப்படாதபோதிலும் சந்தைநின் சில இடங்களில் கமரா பொருத்தப்பட்டுள்ளதனால் அதன் உதவியுடன. ஆராயப்படுகின்றது.
0001  0005

ad

ad