புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2016

அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்கிறது அரசு-யாழில் பிரதமர் தெரிவிப்பு

மாகாணங்கள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு, மத்தியில் இருந்து அதிகாரங்கள் பகிரப்படும் வகையிலான ஒரு அதிகார பகிர்வு குறித்து கலந்துரையாடி வருவதுடன் காய ப்பட்டுள்ள மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது? என்ற உண்மை நிலையை கண்டறிவதற்காகவே காணாமல் போனவர்கள் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார்.

யாழ்மாவட்டச் செயலகத்தில் 4 மாடிகளைக் கொண்ட புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதித் திறப்பு விழாவும், நினைவுக்கல் திரை நீக்கமும் இன்று (சனிக்கிழமை)  நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது, புதிய கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

‘தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறன. காணாமல் போனவர்கள் தொடர்பான உன்மை நிலையை கண்டறிவதற்காக காணாமல் போனவர்கள் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் இருக்கி றார்களா? இல்லையா? என காண்பதற்கே இந்த அலுவலகம். இதற்கு ஒரு கால எல்லை இல்லை. என்பதுடன் பழிவாங்கும் எண்ணமும் இல்லை. இது மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சியே ஆகும்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பிறந்த நாள் இன்றாகும்.

அவர் பெரும் போராட்டத்தின் மத்தியில் 13ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவந்தார். அதற்கு எதிராக தெற்கிலும், வடக்கிலும் பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவரை கொல்வோம். என்றார்கள். ஆனால் அவரையும், அவர் உருவாக்கிய 13ஆம் திருத்த சட்டத்தையும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அது அரசியல் தீர்வின் அடிப்படையானது.

போர் நிறைவடைந்த பின்னர் 13ஆம் திருத்தச்சட்டம் அரசியல் தீர்வுக்கான அடிப்படையாக அமையும் என நாங்கள் நம்பினோம். ஆனால் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் என்றார்.

ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

இந்த நிலையிலேயே ஐ.தே.கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கினோம். 

‘நாம் நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி, வழிகாட்டல் குழு, மற்றும் 6உப குழுக்கள் ஆகியவற்றை உருவக்கி அதன் ஊடாக சகல மக்களிடமிருந்தும் கருத்துக்களை பெற்றிருக்கின்றோம்.

இதன் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, அதிகார பகிர்வு தேர்தல் முறமை மாற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக பேசி வருகின்றோம்.

குறிப்பாக தேர்தல் மறுசீரமைப்பு விடயத்தில் 80வீதமான முன்னேற்றம் காணப்பட்டிருக்கி ன்றது.

இதேபோல் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தொடர்பா கவும் நாம் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கின்றோம். அதிகார பகிர்வு விட யத்தில் மத்தியில் இருந்து மாகாணங்களுக்கும், நகரசபைகளுக்கும், பிரதேச சபைகளுக்கும் வரை யில் அதிகாரங்கள் பகிரப்பட்டிருக்கும் வகையில் ஒரு அதிகார பகிர்வு குறித்துப் பேசி வரு கின்றோம்.

இதேபோல் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான வாக்கெடுப்பு பொதுசன வாக்கெடுப்பாக அமைவும். மேலும் 9 மாகாணங்களுக்கும் செனற்சபை ஒன்றும் உருவாக்கப்படும். அதற்கான அதிகாரங்கள் தொடர்பாகவும் பேசி வருகிறோம்.

மேலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தொடர்பாக ஆலோசனைகள் பெறப்படுகின்றது.

இந்நிலையில் புதிய அரசியலமைப்பின் உத்தேச யோசனைகள் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நிறைவு செய்யப்படும்.

மாகாணங்களுக்கு சில அதிகாரங்கள் பகிரப்பட்டதன் பின்னர் மத்திய அரசாங்கத்தினால் அவை மீள பெறப்படும் என்ற அச்சமும் உள்ளது. எனவே அவை தொடர்பாகவும் நாங்கள் சரியான முறையில் பேசியிருக்கின்றோம்’

இப்போது சிலர் பௌத்தம், தேசிய கொடி, தேசிய கீதம் பாதுகாக்கப்படவேண்டும்.

என்கி றார்கள். பௌத்த சமயம் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறி இனவாதம் பேசுகி றார்கள்.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டபோது தலதா மாளிகையில் பௌத்த பிக்குகள் போரா ட்டம் ஒன்றை நடத்த இருந்தனர். அப்போது அங்கே சென்று அவர்களை அச்சுறுத்தி புதிய பீடம் ஒன்றை உருவாக்குவோம் என கூறியவர்கள் இப்போது கூச்சலிடுகிறார்கள்’ என்றும் கூறினார்.

ad

ad