புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2016

உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு சர்வதேச கண்காணிப்பு-மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு பரிந்துரை

இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்படவுள்ள நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைக்கு சர்வதேசத்தின் தொழில்நுட்ப உதவிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பையும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடாத்திய மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

பொறுப்புக்கூறலுக்கான விசாரணைப் பொறிமுறையில் எந்தவித சர்வதேச தலையீடுகளும் இருக்காது என்றும் அது ஒட்டுமொத்தமாக உள்ளக நீதிமன்றப் பொறிமுறையாக மாத்திரமே அமையும் என்றும் அரசாங்கம் அறிவித்துவரும் நிலையிலேயே ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கையளித்துள்ள இறுதி அறிக்கையில் இந்தப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கடந்த 2013 ஆம் ஆண்டு காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்திரு ந்தார்.

இந்த ஆணைக்குழு வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பிலும் விசாரணைகளை நடாத்தியிருந்த நிலையில் கடந்த யூலை மாதம் 15 ஆம் திகதி அதன் ஆயுட் காலம் முடிவடைந்திருந்தது.

இதனையடுத்து கடந்த மாதம் பரணகம ஆணைக்குழு ஜனாதிபதியிடம் அளித்த தனது இறுதி அறிக்கையில் ஏராளமான கடத்தல்களும், பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் அவை சர்வதேச மனித உரிமைச் சட்டங்களையும் மனிதாபிமானச் சட்டங்களையும் மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதனால் இந்த பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களுக்க எதிராக வழக்குத் தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இதற்காக சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு விசேட உயர் நீதிமன்றமொன்று அமைக்க ப்பட்டு குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட வேண்டும் என்றும் பரணகம ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது.

இதே பரிந்துரையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட உண்மை களை கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவும் தனது இரண்டாவது அறிக்கையில் பரிந்துரைத்திருந்ததையும் பரணகம ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் இதுவரை அந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாதது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள பரணகம ஆணைக்குழு இந்தப் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறை ப்படுத்தினால் உண்மையை கண்டறிவதுடன் நல்லிணக்க செயற்பாடுகளையும் வெற்றி கரமாக முன்னெடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.  

ad

ad