புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2016

அதிமுக பொறுப்புகளில் இருந்து நத்தம் விஸ்வநாதன் திடீர் நீக்கம்! ஜெயலலிதா அதிரடி உத்தரவு

அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் இன்று அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக நடத்திய முந்தைய ஆட்சிக் காலத்தில், அதிமுக-வின் அசைக்க முடியாத முக்கிய பிரமுகராக நத்தம் விஸ்வநாதன் விளங்கினார்.
அதிமுக-வில் ஜெயலலிதாவிற்கு அடுத்த படியாக இருந்த பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவி வகித்தது போல, பன்னீர் செல்வத்திற்கு அடுத்த படியாக பெரிதும் பேசப்பட்டவர் விஸ்நாதன்.
அவர் மீது பல்வேறு வகையான முறைகேடு வழக்குகள் இருந்ததால், கட்சியில் இருந்து சற்று ஓரங்கட்டப்பட்டார்.
இதன் காரணமாகவே ஜெயலலிதா அவரை கடந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் ஐ. பெரிய சாமியை எதிர்த்து போட்டியிட வைத்தார். ஜெயலலிதா நினைத்தது போலவே அவர் அப்பகுதியில் தோற்கடிக்கப்பட்டார்.
இதையும் காரணமாக கொண்டு அவரிடம் இருந்த திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பதவியையும் பறித்தார்.
அதன் பின்னர் நத்தம் விஸ்வநாதனுக்கு அதிர்ஷ்டவசமாக அதிமுக அமைப்பு செயலாளர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா.
தற்போது ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நத்தம் விஸ்வநாதனின் நண்பர் வீடுகளில் அண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இன்று நத்தம் விஸ்வநாதனின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.


இதன் காரணமாகவே இவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ad

ad