புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2016

கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.  

தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கடந்த 5–ந் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, 6–ந் தேதி நள்ளிரவு முதல் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

5ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் கர்நாடக அரசு அவசர மனு தாக்கல் செய்தது.  மனு மீதான இன்றைய விசாரணையில் இம்மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மேலும், வினாடிக்கு 15 ஆயிரம் அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்பதற்கு பதிலாக வினாடிக்கு 12 ஆயிரம் அடி தண்ணீர் 20ம் தேதி வரை திறந்து விட வேண்டும் என்ற புதிய உத்தரவை பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கர்நாடக அரசு சரியாக கையாளவில்லை என உச்சநீதிமன்றம்  கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.  மேலும், நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை என்றும், பொதுமக்களும் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும்.  சட்டம் -ஒழுங்கை பொதுமக்கள் கையில் எடுப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

ad

ad