கடலையே நம்பி வாழும் தமக்கு மீன்வாடி அமைத்துத்தருமாறு மண்கும்பான் வெண்புரவி நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுனாமி, போர் அனர்த்த நிரந்தர வீட்டுத்திட்டம் முலம் 70 வீடுகள் அல்லைப்பிட்டி வெண்புரவி நகரில் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் குடியேறிய மக்களில் அனேகம் பேர் கடற்தொழிலை நம்பியே தமது சீீவியத்தை நடாத்தி வருகின்றனர். இந்நிலையில் கடலில் பிடிக்கப்படும் மீன்களை இறக்கு மதி செய்வதிற்கும் விற்பனை செய்வதற்கும் , களஞ்சியப்படுத்தல் தேவைகளுக்கு மென ஒரு வாடிகூட இல்லாத சூழ்நிலையில் மீன்களை இறக்குமதி செய்வதில் பெரும் சிரமத்தை முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே தமது வாழவாதரத்தை கட்டியெழுப்புவதற்கு மீன்வாடியொன்றை அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.