22 அக்., 2016

சவூதி அரேபிய இளவரசருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை: பரபரப்பு வீடியோ காட்சி

கொலை வழக்கில் சவூதி அரேபிய இளவரசர் துருக்கி பின் சவூத் அல்-கபீருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதன் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சவுதி அரேபிய அரச குடும்பத்தை சேர்ந்த துர்கி பின் சௌத் கபீர்  என்ற இளவரசர் ,கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த ஒரு சண்டையில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் இளவரசருக்கு சவுதி அரேபிய அரசு மரண தண்டனையை விதித்து தீர்ப்பு வழங்கியது. அதன்படி இளவரசர் துருக்கி பின் சவூத் அல்-கபீருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை, செவ்வாய்க்கிழமை இரவு நிறைவைற்றப்பட்டது. இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பாகி உள்ளது. இதோ அந்த  வீடியோ
சவூதி அரேபிய இளவரசருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை: பரபரப்பு வீடியோ காட்சி