புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2016

காவிரி மேலாண்மை வாரியம் - அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை


காவிரி நதிநீர் பிரச்சனை மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ராஜ்நாத் சிங், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நீர்வளத்துறை அமைசர் உமா பாரதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். இன்று முதல் வினாடிக்கு 6000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்த ஆலோசனையும் நடத்தப்பட்டது.

மேலும் நான்கு நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சரவையை கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிடும் நடைமுறைகள் குறித்தும் மோடி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. 

ad

ad