4 அக்., 2016

நேரில் சந்திக்க அனுமதி மறுப்பு: பிரதமர் அலுவலகம் நோக்கி அதிமுக எம்பிக்கள் பேரணி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, டெல்லியில் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டிருந்தனர்.

பிரதமரை சந்திக்க அதிமுக எம்பிக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுக எம்பிக்கள் பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் பேரணியாக சென்று பிரதமர் அலுவலத்தில் மனு அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம் என்றார்.