4 அக்., 2016

வித்தியா கொலை வழக்கு இம்மாத இறுதிக்குள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனிடம்

வித்தியா கொலை வழக்கு இம்மாத இறுதிக்குள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனிடம் சட்டமா அதிபர்
திணைக்களத்தினால் பாரப்படுத்தப்படும் என்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.றியால் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மோ மாதம் புங்குடுதீவில் வைத்து கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வித்தியா படுகொலை செய்யப்பட்டார். இச் சம்பவம் தொடரப்கா வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில்நடைபெற்றது.
இவ்வழக்கு விசாரணையின் போது சந்தேக நவர்கள் 12 பேரும் மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர். குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரியும் மன்றில் ஆஜராகியிருந்தார்.
இதன் போது மன்றில் தெரிவித்த நீதவான் குறித்த வழக்கு விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது, சட்டமா அதிபர் இது தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் குறித்த வழக்கின் குற்றப் பகிர்வு பத்திரம் யாழ்.மேல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்