4 அக்., 2016

ஜரோப்பிய நாடுகளிற்கு பயணமாகும் வடக்கு முதல்வர்!

புலம்பெயர் உறவுகளது அழைப்பின் பேரில் வடமாகாண முதலமைச்சர் ஜரோப்பிய நாடுகளிற்கான விஜயமொன்றை
மேற்கொள்ளவுள்ளதாகத் தெரியவருகின்றது. இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முற்பகுதியில் இப்பயணம் ஆரம்பமாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமாகாணசபையில் ஆளுநர் நிதியத்திற்கு அனுமதி வழங்கியுள்ள அரசு மறுபுறம் முதலமைச்சர் நிதியத்திற்கான அனுமதியை வழங்க பின்னடித்தே வருகின்றது. கூட்டமைப்பின் கீழான வடமாகாணசபை ஆட்சி பீடமேறி மூன்று வருடங்களை தாண்டியுள்ள போதும் முதலமைச்சர் நிதியத்திற்கான அனுமதி இதுவரை நல்லாட்சி எனப்படும் புதிய அரசிலும் வழங்கப்படாதேயுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் நிதியத்திற்கான அனுமதி விரைவில் வழங்கப்படாலாமென எதிர்பார்க்கப்படுகின்ற வேளையிலேயே முதலமைச்சரது மேற்கு நாடுகளிற்கான விஜயம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் நிதியத்திற்கான நிதி திரட்டலிற்காகவே இப்பயணம் இடம்பெறுவதாக கூறப்படுகின்ற போதும் முதலமைச்சர் முதலமைச்சர் அலுவலகம் இதனை உறுதிப்படுத்தியிருக்கவில்லை.
எனினும் பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுக்கே முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் பிரித்தானியா செல்லவிருக்கிறார் என உறுத்திப்படுத்திய செய்திகள் தெரிவிக்கின்றன