புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2016

காவிரி விவகாரம்: நாள்தோறும் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அக்டோபர் 7 ந்தேதி முதல் 18 -ந்தேதி வரை  நாள் தோறும் 2 ஆயிரம் கன அடி  தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மத்திய நீர்வள தலைவர் தலைமையில் குழு அமைக்கவேண்டும். கர்நாடக தமிழ்நாடு அணைகளில் உள்ள நீர் இருப்பை இந்த குழு ஆய்வு செய்யவேண்டும். இந்த குழு ஆய்வு செய்து அக்டோபர் 17 ந்தேதிக்குள் அறிக்கை தர வேண்டும். தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறித்து காவிரி மேற்பார்வைக் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்த வேண்டும். கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்து  வரும் 17ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

ad

ad