1 நவ., 2016

யாழ் பல்கலை மாணவர்களின் போராட்டம் நிறுத்தம்-நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நிலையில் அதற்கு நீதி கோரி மாணவர்கள் மேற்கொண்டு வந்த எதிர்ப்புப் போராட்டம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான  இன்றைய கலந்துரையாடலின் பின்னர் கைவி டப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இன்று காலை விஜயம் செய்த மீள்குடியேற்ற இந்துமத சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்  பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் மாணவர் ஒன்றியத்தலைவர்களுடன் கலந்து ரையாடலில் ஈடுபட்டார்.

இக் கலந்துரையாடலில் அமைச்சரின் உறுதிமொழிகளையடுத்து தமது போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டுள்ளதாக அமை ச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்துரையாடலின் பின்னர்   தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதியுடன் நாளை பகல் கொழும்பில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர் ஒன்றியம் ஆகியவற்றுடனான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அமைச்சர் தெரி வித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தை முடக்கும் செயற்பாட்டில் மாணவர்கள் ஈடுபட்டதுடன்  வாயிற்கதவுகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்க