25 பிப்., 2017

வடக்கில் நிலங்களை விடுவிக்க இராணுவம் கால அளவை தீர்மானித்துள்ளது – மங்கள சமரவீர

வடக்கில் நிலங்களை விடுவிக்க இராணுவம் கால அளவை தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளதார்.

தமிழ் மக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணிகள் அனைத்தும் விடுவிக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது இடம்பெற்ற விவாதத்தில் கூறியதற்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு இராணுவ பயன்பாட்டிற்காக பொதுமக்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 2,400 ஏக்கர் நிலங்களை உரியவர் வசமே ஒப்படைக்கப்பட்டது. மேலும் 4,100 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்படும் என சமரவீர பதிலளித்தார்.
தமிழர் நலம் காண அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஆவணப்படுத்த வேண்டும். ஏனெனில் இந்த விவகாரம் தொடர்பாக உறுதியான முடிவை எட்ட நமது அண்டை நாடான இந்தியாவும் முக்கிய பங்காற்றியுள்ளது.