புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2017

அமைச்சர் விழாவுக்கு வரவேண்டாம் என போலிஸ் தள்ளுமுள்ளு: எம்.எல்.ஏ. வேட்டி அவிழ்ப்பு: கடை அடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடக்கிறது. தொகுதி ச.ம.உ தி.மு.க மெய்யநாதன் சைக்கிள்களை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொள்வதால் தி.மு.க ச.ம.உ மெய்யநாதன் கலந்து கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் ஆசைப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் சாந்தி ச.ம.உ வுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இந்த தகவல் வெளியானதால் திருவரங்குளம் பகுதி மக்கள் அமைச்சருக்காக எம்.எல்.ஏவை அவமதிக்கும் கல்வி அதிகாரியை கண்டிப்பதாக பதாகை வைத்த்துடன் அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர். அவர்களுடன் ச.ம.உ மெய்யநாதனும் சாலை ஓரம் நின்றார். 

தி.மு.க சமஉ மற்றும் தீபா பேரவையினர் எதிரிப்பு காட்ட காத்திருக்கும் தகவல் அமைச்சருக்கு கிடைக்க கால தாமதம் செய்துள்ளார். அந்த நேரம் அங்கு வந்த புதுக்கோட்டை டி.எஸ்.பி. பாலகுரு தலைமையிலான போலிசார் மெய்யநாதன் உள்ளிட்டவர்களை அங்கிருந்து வெளியேறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் திடீர் சாலை மறியிலில் அமர்ந்தனர். போலிசார் கைது செய்வதாக கூறி வழுக்கட்டாயமாக இழுக்க தள்ளு முள்ளு ஏற்பட்டது. வலுக்கட்டாயமாக இழுத்த்தால் ச.ம.உ வேட்டி அவிழ்ந்த்து. அதன் பிறகு  கைது செய்த போலிசார் ஒரு வாகனத்தில் ஏற்றினார்கள். மறுபடியும் போலிஸ் வாகனத்தில் இருந்து இறங்கிய எம்.எல்.ஏ மெய்யநாதன் உள்ளிட்டவர்கள் மீண்டும் சாலை மறியல் செய்தனர். மீண்டும் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு எற்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை ஆலங்குடிக்கு கொண்டு சென்றனர்.

இந்த நேரத்தில் ச.ம.உவுக்கு ஆதரவு தெரிவித்து திருவரங்களத்தில் கடைகள் அடைக்கப்பட்டது. 

தீபா பேரவையினர் அமைச்சருக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டதாக போலிசார் தகவல் சொன்ன பிறகு அமைச்சர் புதுக்கோட்டையில் இருந்து திருவரங்குளத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் செல்லும் வழியில் உடையனேரி காலனி மக்கள் அமைச்சர் காரை மறித்து முற்றுகையிட்டனர். இதனால் மேலும் பரபரப்பு எற்பட்டது.

அமைச்சர் வருவார் என்று நீண்ட நேரமாக மாணவிகள் வரவேற்பிற்காக செருப்பு கூட இல்லாமல் வெயிலில் காத்திருந்தனர். பரபரப்புகளுக்கு இடையே பாதுகாப்புடன் வந்த அமைச்சர் சைக்கிள்களை வழங்கினார்

ad

ad