புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2017

நான் வெளிப்படையாக சொல்கிறேன் ! மிகவும் வேதனையளிக்கிறது – சம்பந்தன்

தமிழ் மக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணிகள் அனைத்தும் விடுவிக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம்
சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது இடம்பெற்ற விவாதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர்,
சிறுபான்மையினர்களுடைய பகுதிகள் தொடர்ந்தும் விடுதலை செய்யப்படாமல் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது.
நான் வெளிப்படையாக உங்களிடம் சொல்கிறேன். தமிழ் மக்களின் நிலப்பகுதிகள் விடுதலை செய்யப்படாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
இந்த நிலைமைக்கு ஒரு முடிவு வேண்டும். அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து உணர்ந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி இதனை உணரவேண்டும். பிரதமர் இந்த விவகாரத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதேவேளை பழைய கசப்பான அனுபவங்களில் இருந்து வெளிவரவேண்டும்.
தமது சொந்த நிலத்தை அவர்கள் திரும்பக் கேட்பது என்பது அவர்களின் பிறப்புரிமை. அதில் இருந்து நீங்கள் பின்வாங்க முடியாது. அதனை இந்த அரசாங்கம் செய்து முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பதில் அளித்துப் பேசிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,
வடக்கில் நிலங்களை விடுவிக்க இராணுவம் கால அளவு குறித்து தீர்மானித்துள்ளது.
அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு இராணுவ பயன்பாட்டிற்காக பொதுமக்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 2,400 ஏக்கர் நிலங்களை உரியவர் வசமே ஒப்படைக்கப்பட்டது. மேலும் 4,100 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்படும் என சமரவீர பதிலளித்தார்.
தமிழர் நலம் காண அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஆவணப்படுத்த வேண்டும்.
ஏனெனில் இந்த விவகாரம் தொடர்பாக உறுதியான முடிவை எட்ட நமது அண்டை நாடான இந்தியாவும் முக்கிய பங்காற்றியுள்ளது.
13-வது அரசியலமைப்பு திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழ் பேசும் மக்கள் கண்ணியத்துடனும் சுய மரியாதையுடனும் வாழ வகை செய்ய வேண்டும் எனவும் இந்தியா உறுதியாக உள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இதையே குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பது இந்தியாவின் தனிப்பட்ட பலம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad