7 மார்., 2017

மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமனம் - சீ.வி.கே.சிவஞானம்

 வடக்கு மாகாண  வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில்  உள்ள வெற்றிடங்களுக்கு நியமனம் செய்யும்படி மாகணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண நீர் தேவைகள், குடி தண்ணீர்த் தேவைகள் தொடர்பாக ஆராய்வதற்கான சிறப்பு அமர்விலேயே இந்த அறிவிப்பை அவைத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு  மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத் தி வரும் பட்டதாரிகள் என்னை சந்தித்ததற்கு இணங்க  வடமாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைகளங்களில் உள்ள வெற்றிடங்களை பட்டதாரிகளை கொண்டு நிரப்பபடும் என நான்  உறுதியளித்துள்ளேன்.

இதற்கமைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு இந்த அமர்வு நிறைவடைந்தவுடன் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ள நிலையில்,  பட்டதாரிகளை இங்குள்ள வெற்றிடங்களுக்கு நியமனம் செய்யும்படியாக தாம் கேட்டு கொள்வதாக   அவைத்  தலைவர் கூறியுள்ளார்.