இச் சம்பவம், பண்டாரவளை – தியத்தலாவை பிரதான வீதி கஹாகொல்லை என்ற இடத்தில் இன்று காலை 5.20 மணிக்கு இடம்பெற்றுள்ளது. பண்டாரவளையிலிருந்து அதிகாலை தியத்தலாவைக்கு சென்ற குறித்த பேரூந்து தியத்தலாவையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஹெபராவை – கிராந்துருகோட்டை என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த போதே, இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பேரூந்தின் சாரதிக்கு பின்னாலுள்ள 3 ஆவது ஆசனத்தில் ஏற்பட்ட புகையுடன் வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
வட பகுதியிலிருந்து இராணுவத்தினர் விடுமுறையில் தென்பகுதிக்கு வரும்போது யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவைக்கு செல்லும் பேரூந்தில் வந்து தியத்தலாவையிலிருந்து மற்றைய பேரூந்தில் பயணிப்பது வழமையாகும். இந்நிலையில், இராணுவத்தினரும் வழமைபோன்று குறித்த பேரூந்தில் பயணித்த போதே, இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து, பண்டாரவளை மற்றும் தியத்தலாவைப் பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
|