புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2018

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பயங்கரவாத முத்திரை குத்துதில் சுவிஸ் அரசு தீவிரம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்துவதில் சுவிஸ் அரசாங்கம் முனைப்புக் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் இயக்கமானது குற்றவாளிகளின் இயக்கம் என்று சுவிட்சர்லாந்தின் சட்டமா அதிபர் Juliette Noto , மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்துவதில் சுவிஸ் அரசாங்கம் முனைப்புக் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் இயக்கமானது குற்றவாளிகளின் இயக்கம் என்று சுவிட்சர்லாந்தின் சட்டமா அதிபர் Juliette Noto , மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குற்றப்பின்னணி கொண்ட ஒரு அமைப்புக்கு இருக்க வேண்டிய அனைத்தும் அம்சங்களும் விடுதலைப் புலிகள் அமைக்கும் இருப்பதாக அவர் கருதுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சட்டத்திட்டங்களை வகுத்து அதன் அடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பட்டு வந்ததாக கூறும் Juliette Noto, அந்த இயக்கத்தின் உண்மையான நோக்கத்தை குற்றவியல் நடவடிக்கைகளால் எதிர்கொண்டதாகவும், ஆனால் அவை அனைத்தும் மிக நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்கம் மீது இருக்கும் அதே பார்வையை தாம் சுவிட்சர்லாந்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவுடன் பொருத்திப் பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இயக்கத்தில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் அவர்களது செயல்பாடுகளில் மிகவும் ஈடுபாட்டுடன் இயங்குவதாகவும்,ஆனால் அந்த இயக்கத்தை ஆதரிப்பவர்கள் அதன் கருத்தியலில் முழு ஈடுபாட்டுடன் இயங்குவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போர் நிறுத்த காலகட்டங்களில், குறிப்பாக 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நவம்பர் 2005 வரை விடுதலைப்புலிகள் இயக்கமானது தங்கள் அரசியல் எதிரிகளை படுகொலை செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டுமின்றி, திருகோணமலை பகுதியில் இஸ்லாமிய இனத்தை நிர்மூலம் செய்ததையும், அதே காலகட்டத்தில் 2 அமைச்சர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் Noto சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காக படுகொலை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த வழக்கறிஞர் Noto,பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகள் இயக்கமே கலவரத்தையும் போரையும் ஊக்குவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனிவா ஒப்பந்தத்தை ஒருக்காலும் மதிக்காத விடுதலிப்புலிகள் இயக்கம் எப்போதுமே பயங்கரவாத நடவடிக்கைகளில் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளது என்றார்.

தற்போது வழக்கை எதிர்கொள்ளும் உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் 13 பேரும், விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் மிகத் தெளிவான பார்வை கொண்டவர்கள். ஆதலால், உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழு சுவிட்சர்லாந்தில் சேகரித்த நிதி மொத்தமும் விடுதலைப்புலிகள் அமைப்புக்காகவே என வழக்கறிஞர் Juliette Noto திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ad

ad