புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2018

கடப்பா ஏரியில் கிடந்த 5 தமிழர்களின் சடலங்கள்! அடித்தே கொன்று ஏரியில் வீசியிருக்கிறது ஆந்திரப் போலீஸ்!


செம்மரம் வெட்டுவதாகச் சொல்லித்தான் தொடர்கிறது இந்த போலி என்கவுண்டர் படுகொலைகள்!

என்ன செய்துகொண்டிருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி அரசு?

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி!

2015ஆம் ஆண்டு 20 தமிழர்களைச் சுட்டுப் படுகொலை செய்தது ஆந்திரப் போலீஸ். அவர்கள் செம்மரம் வெட்டினார்கள் என்று காரணம் சொன்னது.

அதற்கா இந்தப் படுகொலை என்று நாடே அதிர்ச்சியில் உறைந்தது.

செம்மரம் வெட்டச் சொன்னவர்களும் ஆந்திரப் போலீசுக்குத் தெரியும்தானே, அவர்களை ஒன்றும் செய்வதில்லையா என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. ஆனால் அதற்கு இதுவரை பதில் கிடையாது.

காக்கா, குருவிகளைப் போல் தமிழர்களைச் சுட்டுத்தள்ளுவது மட்டும் தொடர்ந்து நடக்கிறது. இப்படி 30 தமிழர்களை இதுவரை தீர்த்துக்கட்டியிருக்கிறது ஆந்திரப் போலீஸ்.

அந்தப் பட்டியலில் இப்போது மேலும் 5 தமிழர்கள்!

ஆந்திராவின் கடப்பா ஏரியில் அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அடித்தே கொன்று ஏரியில் வீசியிருக்கிறார்கள். மனித உரிமை மீறல் பிரச்சனை எழக் கூடாது என்று இப்படிச் செய்வதாகத் தெரிகிறது. 3 அடி குட்டையில் எப்படி சாக முடியம் என்று கேள்வி எழுப்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

இந்த 5 சடலங்களுடன் தொலைபேசி எண்கள், புகைப்படங்களும் இருந்தன. ஆய்வு நடக்கிறது. அவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டிலிருந்து நடக்கும் இந்த மாபாதகச் செயலை ஒன்றிய அரசு மட்டுமல்ல, தமிழக அரசே கண்டுகொள்வதில்லை என்பதுதான் மாபெரும் கொடூரம். அதனால் ஆந்திரப் போலீசுக்கு இன்னும் தொக்காகிப்போனது.

முதலில் 20 தமிழர்களைச் சுட்டுக் கொன்ற வழக்கையே நடத்தாத தமிழக அரசு இப்போது 5 தமிழர்களைச் சுட்டுக் கொன்றதற்கு என்ன செய்யும் தெரியவில்லை. ஏனென்றால் இதற்கு இதுவரை தமிழக அரசு ஒரு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை.

ஆந்திராவில் தமிழர்கள் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டும் காணாமல் வாழாவிருக்கும் மத்திய, மாநில அரசுகளை வன்மையாக கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

ஆந்திரப் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட அத்தனை சம்பவங்களுக்கும் முறையான சி.பி.ஐ விசாரணை வேண்டும்; மேலும் இந்த 5தமிழர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழு பரிசோதனை செய்ய வேண்டும்; இந்த வழக்கு விசாரணையை ஆந்திரா, தமிழ்நாடு இல்லாமல் வேறொரு மாநில அரசைக் கொண்டு நடத்தப்பட வேண்டும்.

குறிப்பாக தமிழக அரசு இதில் தன் மவுனத்தைக் கலைக்க வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதுடன் அவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் பெற்றுத் தர வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

ad

ad