புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2018

கூட்டமைப்பும், முன்னணியும் இரகசிய நகர்வு!!

கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற கட்­சி­கள் அந்­தந்த சபை­க­ளில் ஆட்சி அமைப்­பது என்ற புரிந்­து­ணர்வை தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி குழப்­பு­மாக இருந்­தால், பதி­ல­டி­யாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் முன்­னணி கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற சபை­க­ளில் ஆட்சி அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் வடக்­கில் 32 சபை­க­ளில் எந்­த­வொரு கட்­சி­யும் தனித்து ஆட்சி அமைக்க முடி­யாத சூழல் ஏற்­பட்­டுள்­ளது. ஒவ்­வொரு சபை­க­ளி­லும் கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற கட்சி, அந்­தச் சபை­க­ளில் ஆட்சி அமைப்­பது என்ற யோசனை வர்த்­தக சங்­கம் மற்­றும் சிவில் தரப்­புக்­க­ளால் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அதற்கு அமை­வாக சபை­க­ளில் ஆட்சி அமைப்­ப­தற்கு முடிவு செய்­தி­ருந்­தது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை, நல்­லூர் பிர­தேச சபை, கர­வெட்­டிப் பிர­தேச சபை ஆகி­ய­வற்­றி­லும் ஆட்சி அமைக்­கப் போகின்­றோம் என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி தெரி­வித்­தி­ருந்­தது. சபை­க­ளில் தவி­சா­ளர்­க­ளைத் தெரிவு செய்­யும்­போது இர­க­சிய வாக்­கெ­டுப்பு நடத்­து­வ­தற்­கும் தாங்­கள் கோர­வுள்­ளோம் என்­றும் அந்­தக் கட்சி குறிப்­பிட்­டி­ருந்­தது.

நல்­லூர் பிர­தேச சபை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு 6 ஆச­னங்­க­ளைப் பெற்­றுள்­ளது. தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணிக்கு 5 ஆச­னங்­கள் கிடைத்­தது. முன்­னாள் விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன் தலை­மை­யி­லான சுயேச்­சைக் குழு 2 ஆச­னங்­க­ளைக் கைப்­பற்­றி­யுள்­ளது.

சுயேச்­சைக் குழு­வு­டன் இணைந்து ஆட்சி அமைப்­ப­தற்கு தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி தீவி­ர­மாக ஆராய்ந்து வரு­கின்­றது.

அதே­வேளை, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி கூடிய ஆச­னங்­க­ளைக் கைப்­பற்­றிய சாவ­கச்­சேரி நகர சபை மற்­றும் பரு­தித்­துறை நகர சபை­க­ளில் ஆட்சி அமைப்­பது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கவ­னம் செலுத்தி வரு­கின்­றது.

சாவ­கச்­சேரி நகர சபை­யில் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி 6 ஆச­னங்­க­ளை­யும், கூட்­ட­மைப்பு 5 ஆச­னங்­க­ளை­யும் பெற்­றுள்­ளது. அந்­தச் சபை­யில் போட்­டி­யிட்ட சுயேச்­சைக் குழு ஓர் ஆச­னத்­தைக் கைப்­பற்­றி­யுள்­ளது. அந்­தச் சுயேச்­சைக் குழு­வுக்­கும், கூட்­ட­மைப்­புக்­கும் இடை­யி­லான பேச்­சுக்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. சாவ­கச்­சேரி நகர சபை­யில் ஆட்சி அமைப்­ப­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உரிமை கோரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதே­போன்று பருத்­தித்­துறை நகர சபை­யி­லும் முன்­னணி 6 ஆச­னங்­க­ளை­யும், கூட்­ட­மைப்பு 5 ஆச­னங்­க­ளை­யும் பெற்­றுள்­ளன. கூட்­ட­மைப்பு அந்­தச் சபை­யி­லும் ஆட்சி அமைப்­ப­தற்­கான முயற்­சி­க­ளில் இறங்­கி­யுள்­ளது

ad

ad