புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2018

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது! - சுமந்திரன்


எதிர்க்கட்சி பதவியை மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சிமன்றத்
தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அதிக வாக்குகளை பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு எதிர்க்கட்சி அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது
நேற்று ஊடக சந்திப்பொன்றில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறுகையில், ஜனநாயக ரீதியில் சிந்தித்தால் இப்போதுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினரை பிரதான எதிர்க்கட்சியாக நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம். எ. சுமந்திரன் கருத்து வெளியிடுகையில், 'ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக பாராளுமன்றத்தில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் எதிர்க்கட்சி பதவியை தட்டிப்பறிக்க முடியாது. மஹிந்த ராஜபக் ஷவும் அவரது அணியும் தனித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தினால் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து பார்க்கலாம் என கூறினார்

ad

ad