புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2018

கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய போதும் சாதகமான பதிலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவிக்கவில்லை-யோகேஸ்வரன்

தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஆட்சியமைக்க வேண்டும் என்ற வகையில் கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய போதும் இதற்குச் சாதகமான பதிலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவிக்கவில்லை. இவர்கள் வெறுமனே ஊடகங்களுக்கு ஒரு கருத்தையும், உள்ரீதியாக வேறு செயற்பாடுகளையும் மேற்கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்த முனைகின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம் யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளை தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று பரவலாகப் பேசப்படுகின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகிய இணைந்து பேச வேண்டும் என்கின்ற விடயம் சில ஊடகங்கள் மற்றும் சில அமைப்புகள் மூலம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தமிழ் மக்கள் விடுதலைப் பலிகள் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமாகிய நா.திரவியம் அவர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தொடர்பில் நேற்று மாலை கருத்துத் தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்தார்.

தற்போது நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கோரளைப்பற்று, கோரளைப்பற்று வடக்கு, ஏறாவூர்ப்பற்று போன்ற பிரதேச சபைகளில் நாங்கள் சில கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் இருக்கின்றது. இதே வேளையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது பகிரங்க அறிக்கையை விடுத்திருந்தது. தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க விரும்புகின்றோம்.

நாங்கள் சகல விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதற்குத் தயாராக இருக்கின்றோம் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது என்கின்ற அழைப்புக்களை இணையத்தளங்கள், பத்திரிகைகள், ஊடகங்கள் ஊடாக வெளியிட்டிருந்தார்கள். அந்த வகையில் வாழைச்சேனைப் பிரதேசத்தைப் பொருத்தவரையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள் அதனைப் பாசீலியுங்கள் என்று சிலரும், பலர் அது பொருத்தமில்லை என்றும் தெரிவித்திருந்தார்கள். அவ்வாறு தமிழ் மக்கள் இணைந்து ஆட்சி அமைக்கின்ற விடயத்தை நாங்கள் வரவேற்கின்றோம்.


tamilcnn.lk

அந்த வகையில் எமது கோரளைப்பற்று, கோரளைப்பற்று வடக்கு, ஏறாவூர்ப்பற்று போன்ற பிரதேச சபைகளில் எமது தமிழ் மக்கள் அனைவரும் சேர்ந்து ஆட்சி அமைத்தால் அது நன்றாக இருக்கும் என்ற அபிப்பிராயமும் எங்களுக்குத் தோன்றியது. அதன் நிமித்தம் எமக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் கொள்கை ரீதியாகப் பல முரண்பாடுகள் இருந்தாலும் நாங்கள் அதனைப் பொருட்படுத்தாத வகையில் இது சார்பாகப் பரிசீலிப்பதற்கு எமது தலைமையிடம் நான் வேண்டுகோள் விடுத்தேன். அதன் நிமித்தம் எமது தலைமையும் இது தொடர்பில் பேசுமாறு என்னிடம் பெறுப்புத் தந்தார்கள்.

அதன்படி தமிழ் மக்கள் விடுதலைப்பு புலிகள் கட்சியின் கோரிக்கையின் பிரகாரம் கடந்த 16ம் திகதி மாலை 05.30 மணிக்கு நானும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரவியம் அவர்களும் சேர்ந்து வாழைச்சேனையில் ஓர் இல்லத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். நான் அவரிடம் நீங்கள் சகல விட்டுக் கொடுப்புடன் தமிழ் கட்சிகள் சேர்ந்து தமிழ் மக்கள் பிரதேச சபையை ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்புத் தருவதாக ஊடகங்கள் மூலம் வெளியிட்டிருக்கின்றீர்கள்.

இந்த கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டு உங்களிடம் பேசுவதற்கு வந்துள்ளேன் என்று தெரிவித்தேன். கோரளைப்பற்று, கோரளைப்பற்று வடக்கு, ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேச சபைகளில் நாங்கள் தவிசாளராகச் செயற்பட விரும்புகின்றோம். எனவே உங்களது கருத்துக்களை இணைந்து ஆட்சி அமைப்பது சார்பாக பேச வந்தவன் என்ற சார்பில் கோருகின்றேன் என்று தெரிவித்தேன்.

அப்போது அவர் கூறினார் ஆரம்பத்தில் நாங்கள் அவ்வாறு தான் அறிக்கை வெளியிட்டிருந்தோம். தற்போது அதனை கட்சித் தலைவர் சந்திரகாந்தன் அவர்களிடம் ஒப்படைத்திருக்கின்றோம். அவர் தற்போது சிறையில் இருப்பதால் அவருடன் நாளை காலை சென்று கலந்துரையாடிய பின்னர் முடிவினைத் தெரிவிப்பேன் என்று தெரிவித்தார். நான் தெரிவித்தேன் இது தொடர்பில் நாளை காலை வெகு விரைவில் முடிவினைத் தெரிவிக்க வேண்டும் என்று. பின்னர் 17ம் திகதி பல தடவைகள் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய போது அவர் அதற்கான பதிலை எனக்குத் தரவில்லை.

18ம் திகதியான இன்றும் இதுவரையில் பதில் கிடைக்கவில்லை. இதன் காரணமாக இன்றைய தினம் பிற்பகல் நான் எமது தலைமையுடன் தொடர்பு கொண்டு இவர்கள் இது சாhப்பாக எந்த முடிவும் சொல்லவில்லை என்பதைத் தெரிவித்தைத் தொடர்ந்து ஆட்சி அமைப்பது சார்பாக வேறு ஏற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

இதனை எமக்கு வாக்களித்த தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக ஆட்சியமைக்க வேண்டும் என்ற வகையில் கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய போதும் இதற்குச் சாதகமான பதிலை அவர்கள் வழங்காதமையினால் நாங்கள் மாற்று முடிவுக்கு வந்திருக்கின்றோம். இவர்கள் வெறுமனே ஊடகங்களுக்கு ஒரு கருத்தையும் உள்ரீதியாக வேறு செயற்பாடுகளையும் மேற்கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்த முனைகின்றார்கள். இது தொடர்பில் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எமது மக்களுக்காக அவர்களுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றும் அவர்கள் எவ்வித முடிவும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.

ad

ad