11 பிப்., 2018

சாவகச்சேரி, பருத்தித்துறை நகர சபைகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. 11 வட்டார ரீதியான
உறுப்பினர்களையும், 7 விகிதாசார ரீதியான உறுப்பினர்களையும் கொண்ட சாவகச்சேரி நகர சபையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 வட்டாரங்களிலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1 வட்டாரத்திலும் வெற்றி பெற்றுள்ளன. விகிதாசார முறையிலான ஆசனப் பகிர்வு இன்னமும் அறிவிக்கப்படாத போதிலும், இங்கு தமிழ்க் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது.
அதேவேளை, பருத்தித்துறை நகரசபையிலும் அதிகளவு வட்டாரங்களில் தமிழ்க் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.