புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2018

மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க 780 மில்லியன் ரூபா இராணுவத்துக்கு


வடக்கு, கிழக்கில், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளது.

விடுவிக்கப்படும், காணிகளிலுள்ள படை முகாம்களை வேறு இடங்களில் நிறுவி, பொதுமக்களுக்கு உரிய அந்தக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் 780 மில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளது. வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில், ​கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை முக்கியமான கூட்டமொன்று இடம்பெற்றது.அதன்போதே, காணிகளை விடுவிப்பதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு திறைசேரி இணங்கியுள்ளது .

அதற்கமைய, யாழ். குடாநாட்டில் அச்சுவேலி, மயிலிட்டி வடக்கு, தென்மராட்சி, கிளாலி, பளை மற்றும் முகமாலை உள்ளிட்ட இடங்களிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில், முறக்கொட்டஞ்சேனையிலும் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. விடுவிக்கப்படவிருக்கின்ற காணிகள், அடையாளம் காணப்பட்டுள்ளனவென என்றும், குறித்த காணிகளை உறுதிப்படுத்துவதற்கு, அந்தந்த பிரதேசங்களின் செயலாளர்கள், உரிமையாளர்களுடன் தொடர்புகொள்வார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad