20 ஆக., 2018

நிலையியல் கட்டளைகளின் கீழ் விஜயகலா மீது நடவடிக்கை! - சபாநாயகருக்கு சட்டமா அதிபர் பரிந்துரை

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிற்கு எதிராக நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா என ஆராயுமாறு சபாநாயகருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய உரையொன்றின் போது விடுதலைப் புலிகள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

இது சாத்தியமாகாத பட்சத்தில் நிலையியல் கட்டளைகளில் மாற்றங்களை மேற்கொள்ள முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு கேட்டுக் கொண்டுள்ள சட்டமா அதிபர் அது சாத்தியமாகாத பட்சத்தில் என்ன நடவடிக்கை என்பதை சபை தீர்மானித்துக் கொள்வதற்கு அனுமதிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சபாநாயகர் விஜயகலா மகேஸ்வரனிற்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம் என ஆலோசனை கோரியதை தொடர்ந்தே சட்டமா அதிபர் தனது ஆலோசனையை வழங்கியுள்ளார்.