புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2018

உத்தரபிரதேசத்தி்ல் பள்ளி மாணவிக்கு நேர்ந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!


இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் பள்ளி மாணவியை உயிரோடு எரித்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.


தொலைபேசியில் பேச வற்புறுத்தியதை தந்தையிடம் கூறிய மாணவியை இளைஞர்கள் உயிரோடு எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் சர்தானா நகரத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் தினமும் மாலையில் வீட்டில் இருந்து மேலதிக வகுப்பிற்கு சென்று வருவது வழக்கம்.

அந்த வழியில் சில இளைஞர்கள் நின்று கொண்டு அந்த மாணவிக்கு தினமும் தொல்லை செய்து வந்தனர்.

இந்நிலையில் மேலதிக வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிய அந்த மாணவியை இடைமறித்த இளைஞர்கள் கையில் ஒரு கையடக்க தொலைபேசியை திணித்தனர்.

இந்த தொலைபேசியில் நள்ளிரவு நேரத்தில் தங்களுடன் பேசும்படி அவர்கள் மிரட்டிக் கூறினார்கள். பின்னர் மாணவி அங்கிருந்து வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி அந்த வாலிபர்கள் கொடுத்த தொலைபேசியையும் தந்தையிடம் கொடுத்தாள்.

இந்த விடயத்தால் கோபமடைந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் . தொலைபேசியை கொடுத்த இளைஞர் ஒருவரின் வீட்டுக்கு சென்று அந்த இளைஞரின் பெற்றோரிடம் புகார் செய்ததோடு கடுமையான எச்சரிக்கையும் செய்துவிட்டு சென்றனர்.

இது, அந்த இளைஞருக்கும், அவரது நண்பர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் குறித்த இளைஞர்கள் 6 பேரும் மாணவியின் வீட்டுக்கு சென்றனர்.

அவர்கள் சென்றவேளை வீட்டில் பெற்றோர்கள் இல்லை. மாணவி மட்டும் தனியாக இருந்தாள். அவளிடம் சென்று எப்படி எங்களை பற்றி புகார் செய்யலாம்? என மிரட்டித் தகராறு செய்தனர்.

திடீரென அவர்கள் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை எடுத்து மாணவி மீது ஊற்றி தீ வைத்தனர். இதில், அவளது உடல் பற்றி எரிந்தது. வீட்டிலும் தீப்பற்றி கொண்டது. பின்னர் வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைத்தனர்.

மேலும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாள். மாணவி மீது தீ வைத்தவர்கள் ராஜ்வன்ஸ் பக்டி, தேவேந்திர பக்டி, ரோகித் சைனி, கச்சிராலா சைனி, அமன், தீபக் என தெரிய வந்தது.

பொலிஸார் அவர்களில் 2 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு அந்த ஊரில் அதே போல் பாலியல் தொல்லை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு பெரும் கலவரம் ஏற்பட்டது. 2 பேர் கொல்லப்பட்டனர். பல நாட்கள் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad