புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2018

பறந்து கொண்டிருந்த விமானத்தில் மாரடைப்பு - புலம்பெயர் தமிழர் மரணம்

டென்மார்க்கில் இருந்து இலங்கைக்குப் புறப்பட்ட புலம்பெயர் தமிழர் ஒருவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த முதலாம் திகதி எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் தாயகத்தை நோக்கி புறப்பட்ட பரமலிங்கம் பாலச்சந்திரன் என்ற 58 வயதுடைய தமிழரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி - வட்டகச்சி பகுதியை பிறப்பிடமாக கொண்ட பாலச்சந்திரன் 3 பிள்ளைகளின் தந்தையாவார். விமானம் புறப்பட்டு ஒன்றரை மணித்தியாலத்தின் பின்னரே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. விமானப் பணியாளர்களால் முதலுதவி வழங்கப்பட்டுள்ள போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

டுபாய் நோக்கி பயணித்த எமிரேட்ஸ் விமானத்தின் அதிகாரிகள் குறித்த நபர் உயிரிழந்த விடயத்தை அறிந்து கிறிஸின் தலைநகரான எதேன்ஸில் அவரது உடலை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளனர். இருப்பினும் இறந்த நபரின் உடல் அவரது சொந்த இடமான டென்மார்க்கிற்கு கொண்டு வரப்படவில்லை.

அவரின் உடலை சொந்த இடத்திற்கு கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அதிகாரிகள் சட்டநடைமுறைகளை எடுத்துள்ளன

ad

ad