7 ஆக., 2018

கோப்பாய்- கைதடி வீதியில் எரிபொருள் பவுசர் மோதி நகைக் கடை உரிமையாளர் பலி! - மகள் படுகாயம்

கோப்பாய் - கைதடி வீதியில் இன்று எரிபொருள் பவுசருடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகள் படுகாயமடைந்தார்.

கோப்பாய் - கைதடி வீதியில் இன்று எரிபொருள் பவுசருடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகள் படுகாயமடைந்தார்.

ரஞ்சன் எனும் நகைக்கடை உரிமையாளர் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் கோப்பாயிலிருந்து கைதடி நோக்கி பயணித்த வேளை, பின்னால் பயணித்த எரிபொருள் பவுசர் மோதியதில், இந்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் 45 வயதுடைய ரஞ்சன் என்ற வர்த்தகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது 18 வயதுடைய அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.