புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2018

வாள்வெட்டுக் குழுவினரை விடுவிக்க முயன்ற சயந்தன்!

வாள்வெட்டு குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில், யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்குமாறு சட்­டத்­த­ர­ணி­யும், மாகா­ண­ சபை உறுப்­பி­ன­ரு­மான கே.சயந்­தன் கோரியுள்ளார். சாவ­கச்­சே­ரி­யில் நேற்­று­முன் தி­னம் கைது செய்­யப்­பட்ட 7 இளை­ஞர்­க­ளை­யும் 14 நாள்­கள் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு மல்­லா­கம் நீதிமன்று நேற்று உத்­த­ர­விட்­டிருந்தது.

7 இளை­ஞர்­களை நேற்­று­முன்­தி­னம் மானிப்­பாய் பொலிஸார் கைது செய்­தி­ருந்­தனர். அத்துடன் அவர்­க­ளி­ட­மி­ருந்து 2 வாள்­கள், ஒரு கோடாரி, ஒரு கைக் கோடாரி, செயின், இரும்­புப் பைப், 3 உந்­து­ரு­ளி­களை மீட்­ட­தா­கப் பொலிஸார் குறிப்­பிட்­ட­னர். குறித்த இளைஞர்களை மானிப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் நேற்­றுக் காலை தடுத்து வைத்து விசா­ரணை மேற்­கொண்டனர். இந்நிலையில் சட்­டத்­த­ர­ணி­யும், மாகா­ண­ சபை உறுப்­பி­ன­ரு­மான கே.சயந்­தன் இளைஞர்கள் சார்பில் பொலிஸ் நிலை­யத்­தில் முன்­னி­லையா­கி இருந்தார்.

விசா­ர­ணை­க­ளின் பின்­னர் இளை­ஞர்­கள் மல்­லா­கம் நீதி­மன்­றில் நேற்­று­ முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். இளை­ஞர்­கள் மீது பொய்க் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்டு அவர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்த சட்­டத்­த­ரணி சயந்­தன், அவர்­க­ளைப் பிணை­யில் விடு­விக்­கு­மாறு கோரி­யுள்­ளார். எனினும் அவரது பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு 14 நாட­கள் விளக்­க­ம­றிய­லில் வைக்க நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.

ad

ad