ரெலோவில் இருந்து விலகுவதாக அந்தக்க்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் கணேஸ்வரன் வேலாயுதம் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று மதியம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
'ரெலோவில் இருந்து விலகுவதாக அக் கட்சியின் செயலாளர் என். சிறிகாந்தாவிடம் கடிதம் மூலம் கடந்த 2ஆம் திகதி அறிவித்து விட்டேன். அதன் அடிப்படையில் தான் ரெலோ கட்சி இரண்டாக உடைந்தது என செய்திகள் வெளியாகி இருந்தன. அது உண்மையல்ல நான் மாத்திரமே ரெலோவில் இருந்து வெளியேறியுள்ளேன். கட்சியில் எந்த பிளவும் இல்லை.
மக்களது எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் கட்சியிலிருந்தவாறு என்னால் முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. இனிவரும் காலங்களில் மக்களின் தொழில் முயற்சிகள் கல்வி விளையாட்டுதுறை மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை மேம்படுத்துவதனை நோக்காக கொண்டு சமூகசேவையினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
அத்துடன் இலாபநோக்கமற்ற சமூகசிந்தனை சார்ந்த ஆர்வலர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயற்படுபவர்கள் எம்முடன் இணைந்து செயற்பட முன்வந்தால் நாம் புதியதோர் கட்சியினை ஆரம்பித்து மாகாணசபையின் ஊடாக மக்களுக்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க கூடியதாக இருக்கும். எனவே சமூக சிந்தனையாளர்களும் ஆர்வலர்களும் எம்முடன் தொடர்பு கொள்ள முடியும் என தெரிவித்தார்.