புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2018

எதிர்கால அரசியல் நிலைப்பாடு pungudutivuதொடர்பில் விக்னேஸ்வரன் 24ஆம் திகதி அறிவிப்பு

தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம்pungudutivu
திகதி நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையினர் அறிவித்துள்ளனர்.
தமிழ் மக்களின் தற்போதைய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது.
இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், இதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் தொடர்பிலும் சில தீர்மானங்களை மேற்கொள்ளும் மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் 24ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் – நல்லூர் ஆலய வடக்கு வீதியில் அமைந்துள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் விசேட உரையாற்றவுள்ளதுடன், தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும் தமிழ் மக்களுக்கு அறிவிக்கவுள்ளார்.
மேற்படி ஒன்றுகூடலுக்கு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பொதுமக்கள், பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், கல்விச் சமுகத்தினர் மற்றும் இளைஞர், யுவதிகள், போன்ற அனைத்துத் தரப்பினரையும் கலந்து பங்களிக்குமாறு தமிழ் மக்கள் பேரவையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

ad

ad