புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2018

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த 40 வயதான மாதவி.. புதிய வரலாறு படைத்தார்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் காலங்காலமாக
அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்கலாம் என உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு நாடு முழுவதும் பல்வேறு பேரணிகள் நடத்தப்படுகின்றன. கேரள மாநில பெண்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டது.
பெண்களுக்கு பாதுகாப்பு வசதி செய்வதற்காக அவர்கள் நவம்பர் 17-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படுவர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. எனினும் உச்சநீதிமன்றம் எந்த கால நிர்ணயத்தையும் விதிக்கவில்லை என்பதால் இன்று பெண்கள் சபரிமலைக்கு வருவர் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி இன்று சபரிமலை செல்வதற்காக பத்தனம்திட்டாவில் பேருந்துக்காக பெண்கள் காத்திருந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் மாதவி. 40 வயதான இவர் சபரிமலைக்கு சென்றார். அப்போது போராட்டக்காரர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து சன்னிதானத்துக்கு செல்ல முடியாமல் தவித்த மாதவியை போலீஸார் மீட்டு பாதுகாப்பாக கோயிலுக்கு அழைத்து சென்றனர். இதனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு முதல் முறையாக 40 வயது பெண் சபரிமலை சென்ற புதிய வரலாற்றை படைத்தார்.
பெண் டாக்டர்களையும் போராட்டக்காரர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தினர். அவர்களின் வயது குறித்து அறிந்த பிறகே அனுமதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு மருத்துவ சேவை செய்வதற்காக வந்த டாக்டர்கள் இவர்கள். இதனால் பரபரப்பு நிலவுகிறது.

ad

ad