புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2018

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு உண்மையை கூற வேண்டும்

சென்னை செங்குன்றத்தில் தனியார் ஜவுளிக்கடை ஒன்றின் விளம்பர படப்பிடிப்பு நடைபெற்றது.
இதில் நடிக்க வந்த நடிகை ராணி, படப்பிடிப்பின் போது நடிகர் சண்முகராஜன் மற்றும் இயக்குநர் ராஜ்கபூர் இருவரும் பாலியல் தொந்தரவு அளித்து தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து ராணியும்  அவரது கணவர் பிரகாஷூம் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் படப்பிடிப்பு தளத்திற்கு விரைந்த போலீசார், இயக்குநர் ராஜ்கபூர் மற்றும் நடிகர் சண்முகராஜனை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில் நடிகர் சண்முகராஜன் தன்னிடம் மன்னிப்பு கேட்டதால், புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை ராணி தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, படப்பிடிப்பின் நிலை கருதி, தொழிலாளர்கள் நலன் கருதியும் புகாரை வாபஸ் பெற்றதாக கூறினார்.
புகார் திரும்பப் பெறப்பட்டதால், செங்குன்றம் காவல் நிலையத்திலிருந்து நடிகர் சண்முக ராஜன் மற்றும் ராஜ்கபூர் இருவரும் விடுவிடுக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சண்முகராஜன், நடிகை ராணியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது தாக்குதல் ஏற்பட்டது. இந்நிலையில் இருதரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்

ad

ad