3 அக்., 2018

பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…


தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள், இன்று (02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யுத்தம் முடிவடைந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை சிறையில் அடைத்து வைக்காமல் உடனடியாக விடுதலை செய்யுமாறு, இதன்போது மாணவர்கள் வலியுறுத்தினர்.

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில், அதன் தலைவர் பி.இந்துஜன் தலைமையில், மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள கிழக்குப் பலக்லைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்துக்கு முன்னால், நிறுவக மாணவர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.