புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

3 அக்., 2018

15 வயது மாணவியுடன் குடும்பம் நடத்திய 18 வயது இளைஞன் அதிரடியாக கைது….!!

15வயது மாணவி ஒருவருடன் 18 வயது இளைஞர் குடும்பம் நடத்துகையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ள பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.தம்புள்ள நகருக்கு அண்மித்த கிராமமொன்றில் இருவரும் தமது பெற்றோருக்குத் தெரியாமல் வேறு ஒரு இடத்தில் குடும்பம் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், சில மாதங்களாக இருவரும் குடும்பம் நடத்தியமையும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதில் 15 வயது சிறுமி ஒரு பாடசாலை மாணவியாவார். தமது பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்புத் தெரிவித்த நிலையில், ஏனையோரின் உதவியுடன் இவர்கள் தனி ஒரு இடத்தில் ஒரு அறையில் தங்கி இருக்கும் போது பொலிஸாரினால் கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிககப்பட்டுள்ளார்.சந்தேக நபராக இளைஞன் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனதுடன் மேலதிக விசாரணைகள இடம்பெற்று வருகின்றன.இதனுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கும் இன்னும் சிலரைப் பொலிசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துளளனர்.

சம்பவம் தொடர்பில் தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்