புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2018

மஹிந்தவிற்கு எதிராக 5ஆம் திகதி மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை – ஜனாதிபதியிடம் கூறிய கூட்டமைப்பு

நாடாளுமன்றத்தில் மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்ற எங்களின் வாதத்தை ஜனாதிபதி
ஏற்றுக் கொண்டார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இந்தநிலையில் குறித்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சிவமோகன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,“ஐக்கிய தேசிய முன்னணி பெயரிடும் பிரதமர் ஒருவரை நாங்கள் ஆதரிப்போம் என்பதை நாங்கள் ஜனாதிபதியிடம் சொன்னோம். ஐந்தாம் திகதி மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை சபையில் முன்வைக்கப்படும்.
அரசியல் கைதிகள் விடுதலை குறித்து மூன்றாம் திகதி நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

ad

ad