புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2018

மஹிந்தவை நீக்கமாட்டார், ரணிலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார் -அரசாங்க பேச்சாளர்

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒரு போதும் நியமிக்கமாட்டார். காரணம் ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாததன் காரணமாகவே ஜனாதிபதி தனக்குள்ள நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தி அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்கினார் என அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையில் நேற்று இரவு இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போது மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், அதனை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

வரலாற்றிலேயே முதன் முறையாக ஆளுங்கட்சி இல்லாமல் பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றது எமது நாட்டில் மாத்திரமே ஆகும்.

பாராளுமன்றத்தில் நடுநிலைமையாக செயற்பட வேண்டிய சபாநாயகர் தனது கட்சி சார்பாக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றார்.

ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் இணைந்து அரசியலமைப்பிற்கும் பாராளுமன்ற சம்பிதாயங்களுக்கு எதிராகவும் என்ன நடவடிக்கைளை முன்னெடுத்தாலும் அதனை நாம் கவனத்தில் கொள்ளப்போவதில்லை.

எதிர்வரும் 7 ஆம் திகதியின் பின்னர் நீதிமன்ற தீர்பிற்கமைய எமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

ad

ad