புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2018

பிரான்ஸில் எரிபொருள் உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் எரிபொருள் உயர்வுக்கு எதிராக மூன்றாவது வாரமாக
நடைபெறும் போராட்டத்தில் காவல் துறையினருக்கும்  போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
காவல் துறைஅதிகாரிகள் மீது மஞ்சள் நிற பெயிண்டு வீசப்பட்டதால் போலிஸார் கூட்டத்தினர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் இதுவரை 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டம் கடந்த மூன்று வாரங்களாக எரிபொருள் உயர்வை எதிர்த்தும் பிரான்ஸில் வாழ்க்கை நடத்துவதற்கான செலவுகள் அதிகரித்து வருவதை எதிர்த்தும் நடைபெற்று வருகிறது.
இந்த வார தொடக்கத்தில் சமாதான போக்கில் அதிபர் மக்ரோங் பேசிய போதும் எரிபொருள் வரியை கைவிடுவதில்லை என தெரிவித்தார்.
உலக வெப்பமயமாதலை எதிர்கொள்ளும் விதமாக பிரான்ஸின் எதிர்கால ஆற்றல் திட்டம் இருப்பது அவசியம் என்று கூறிய அவர், இந்த வரியை எவ்வாறு அமல்படுத்தலாம் என்ற யோசனைகளை தான் வரவேற்பதாக தெரிவித்தார்.
இருப்பினும் அவரின் பேச்சு, சாதாரண மக்களை அவர் புரிந்து கொள்ள இயலாது என்ற மக்களின் எண்ணத்தை போக்கவில்லை.
நடந்தது என்ன?
மத்திய பாரீஸில் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமான சாம்ஸ் எலிசீஸை காவல் துறை மூடிய பின்னர் அங்கு வரும் மக்களை சோதனை செய்ததால்காவல் துறை  மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையேயான போராட்டம் தொடங்கியது.
போராட்டத்தில் வன்முறை வெடிக்கக்கூடும் என்ற நோக்கில் பல கடைகள், வங்கிகள், உணவகங்கள் மூடப்பட்டன.
காவல் துறை  போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். சில போராட்டக்காரர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு காவல் துறையின் தடுப்புகளை உடைத்தனர். காவல் துறை பாதுகாப்பு கவசங்களை அணிந்திருந்தபோது அவர்கள் மீது போராட்டக்காரர்கள் மஞ்சள் நிற பெயிண்டை வீசினர்.
அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.  பலர் அமைதியான முறையில் போராட்டம் நடத்த விரும்புகின்றனர். ஆனால் சிலர் மோதலுக்கு தயாராக உள்ளனர் என தெரிவித்தார்.
"சம்பவ இடத்திற்கு சென்றேன். போராட்டக்காரர்களில் 200 பேர் அமைதியாக போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் 1500 பேர் மோதலுக்காக வந்துள்ளனர். 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என பிரான்ஸின் உள்துறை அமைச்சர் டிவீட் செய்துள்ளார்.
போராட்டத்துக்கு என்ன காரணம்?
பிரான்ஸில் கார்களின் முக்கிய எரிபொருளான டீசலின் விலை, ஒரு லிட்டருக்கு சராசரியாக 1.24 யூரோக்கள் முதல் 1.53 யூரோ என கடந்த 12 மாதங்களில் 23 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதே இந்த போராட்டத்துக்கு காரணம்.
2000களின் தொடக்கங்களிலிருந்து எரிபொருள் விலை இத்தனை உயர்வை காண்பது இதுவே முதல்முறை.
உலகளவில் எண்ணெயின் விலை உயர்ந்தாலும், எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் மீதான வரியை மக்ரோங் அரசு உயர்த்தியுள்ளது. இது 2019ஆம் ஆண்டு மேலும் உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான முதலீடுகளுக்கு நிதி தேவைப்படுவதால் எரிபொருள் மீது அதிகப்படியான வரி விதிக்கப்படுவதாக மக்ரோங் கூறுகிறார்.
மஞ்சள் ஜாக்கெட் போராட்டம்
"மஞ்சள் ஜாக்கெட்" என்று அழைக்கப்பட்ட இந்த போராட்டம் முதலில் டீசல் விலை அதிகரித்ததனால் தொடங்கப்பட்டது. அது பின்னர் வாழ்க்கை நடத்துவதற்கான செலவில் உயர்வு உள்ளிட்ட மக்ரோங்கின் பிற கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் களத்தில் இறங்கியதால் போராட்டம் விரிவடைந்தது.
சனிக்கிழமையன்று பிரான்ஸ் முழுவதும் 1,600 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கு கொண்டதாக பிரான்ஸின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதில் தலைநகரில் நடைபெற்ற போராட்டத்தை தவிர பெரும்பாலான போராட்டங்கள் அமைதியாக நடைபெற்றன. தலைநகர் பாரிஸில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 8000 பேர் கலந்து கொண்டனர்.
பிரான்ஸில் கார்கள் பழுதாகிபோனால் பயன்படுத்துவதற்கு வைத்திருக்கப்படும் பாதுகாப்பு கருவிகளுடன் ஓட்டுநர்கள் மஞ்சள் ஜாக்கெட்டுகளையும் வைத்திருக்க வேண்டும்.
சிவப்பு நிறத்தில் முக்கொம்பு வடிவ தடுப்பு, வண்டி சாலையில் பழுதடைந்தால் வைக்கப்படுவதை போல் ஓட்டுநர்கள் இந்த மஞ்சள் ஜாக்கெட்டுகளை அணிந்திருக்க வேண்டும். இது தொலைதூரத்தில் வருபவர்களுக்கு தெளிவாக தெரியக்கூடிய மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
மஞ்சள் ஜாக்கெட்டுகளை அணிய தவறினால் அபராதம் விதிக்கப்படும் சட்டம் 2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

ad

ad