புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2018

மீண்டும் ஈ.பி.டி.பிக்குள் நுழைந்தார் தவராசா… வடக்கு முதலமைச்சர் வேட்பாளரும் அவரே



epdp-696x447.jpg
நிதி முரண்பாடுகள் காரணமாக கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட முன்னாள் வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவை மீண்டும்
அணைத்துக் கொண்டுள்ளது ஈ.பி.டி.பி. நேற்று ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, தவராசா ஒன்றாக இணைந்து ஜனாதிபதி செயலகத்திற்கும் சென்றிருந்தனர்.
ஈ.பி.டி.பியின் கொழும்பு வீடு விற்பனை சமயத்தில் , சில கோடி ரூபா பணத்தை தவராசா பங்கு தொகையாக கோரியிருந்தார். இதனால் அதிர்ச்சியும், அதிருப்தியுமடைந்த ஈ.பி.டி.பி அவரை கட்சியிலிருந்து நீக்கும் முடிவை எடுத்தது. அதற்கான முயற்சிகளிலும் இறங்கியது.
தவராசாவின் வடக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் பறிக்க முயன்றது. ஈ.பி.டி.பி அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுசெயலாளர், வடக்கு அவைத்தலைவரிற்கு தவராசாவை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கும் கடிதத்தையும் அனுப்பியிருந்தார். எனினும், வடமாகாணசபையில் முதலமைச்சருக்கு குடைச்சல் கொடுக்க தமக்கு தோதான ஒருவர் தேவையென்ற அடிப்படையில், அவைத்தலைவர் தவராசாவை எதிர்க்கட்சி தலைவராக நீடிக்க அனுமதித்தார்.
முன்னாள் உறுப்பினர் ஜெயதிலக பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கையொப்பத்துடன் கடிதம் சமர்ப்பித்திருந்தார். பல இழுபறிகளின் பின்னர் தவராசாவே எதிர்க்கட்சி தலைவராக நீடித்தார். எதிர்க்கட்சி தலைவராக பதவி வகிக்க, தவராசாவிற்கு தார்மீக தகுதி கிடையாதென அவைத்தலைவரும் நேர்காணலொன்றிலும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், தமிழரசு முகாமில் தவராசாவை உள்ளீர்க்கும் சாதக அறிகுறிகள் தென்படவில்லை.

மாகாணசபை தேர்தல் நெருக்கலாமென்ற ஊகங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஈ.பி.டி.பி முகாமில் ஐக்கியமாகும் முயற்சிகளை தவராசா மேற்கொண்டார். ஈ.பி.டி.பியின் கனடா பிரமுகர் ஒருவர் சில மாதங்களின் முன்னர் இணைவு முயற்சியை மேற்கொண்டதை பற்றியும் தமிழ்பக்கம் அப்போது குறிப்பிட்டிருந்தது. தவராசாவை இணைத்துக் கொள்ள அப்போது டக்ளஸ் தேவானந்தா கிரீன் சிக்னல் காட்டியிருந்தார்.
எனினும், பின்னர் அந்த முயற்சிகள் கிடப்பிலிருந்தன. தற்போது புதிய அரசில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சு பதவியை ஏற்ற பின்னர், இணைவு துரிதமாகியுள்ளது.
டக்ளஸ், தவராசா இருவரும் நேரடியாக பேச்சு நடத்தி, இருதரப்பும் ஒன்றிணைந்து செயற்படுவதென இணக்கம் கண்டன. இதன்பின்னரே அண்மையில் ஈ.பி.டி.பியின் தொலைக்காட்சியில் தவராசாவின் நேர்காணல் ஒளிபரப்பப்பட்டது. இதன்போது, நான் இன்னும் ஈ.பி.டி.பி உறுப்பினர்தான் என தவராசா கூறியிருந்தார்.
நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தீபாவளி நிகழ்விற்கு தமிழ் எம்.பிக்கள், முன்னைய வடக்கு மாகாணசபை முக்கியஸ்தர்களிற்கு ஜனாதிபதி செயலகத்தால் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. தவராசாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும், அவர் டக்ளஸ் தரப்புடனேயே நேற்று கலந்து கொண்டிருந்தார்.
டக்ளஸ் தேவானந்தாவின் கீழுள்ள அமைச்சொன்றின் திணைக்களத்தை கவனிக்கும் பொறுப்பு விரைவில் தவராசாவிடம் வழங்கப்படலாமென தெரிகிறது. அத்துடன், வடமாகாணசபை தேர்தலில் ஈ.பி.டி.பியின் முதன்மை வேட்பாளராகவும் அவரே நியமிக்கப்படுவார் என தெரிகிறது

ad

ad