6 நவ., 2018

ரணிலை ஓரினச்சேர்க்கையாளர் என்றா மேடையில் குறிப்பிட்டார் மைத்திரி?: புது சர்ச்சை

கொழும்பில் இன்று நடந்த மக்கள் பலம் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
, இரட்டை அர்த்த வசனத்தில் ரணில் விக்கிரமசிங்கவை கிண்டல் அடித்தார் என்ற விமர்சனம் கிளம்பியுள்ளது. ரணில் ஓரினச்சேர்க்கையாளர் என்று குறிப்பிடும் விதமாக, “வண்ணத்துப்பூச்சி குழு“ என மைத்திரி கிண்டலடித்ததாக கண்டனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.
இன்றைய பேரணியில் உரையாற்றிய மைத்திரி, “ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் வண்ணாத்துப்பூச்சிகள் குழு ஒன்றுதான் அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளை எடுத்தது. ஜனாதிபதியாகிய நானோ, அமைச்சர்களோ முக்கிய முடிவுகளை எடுக்க முடியவில்லை. வண்ணத்திப்பூச்சிகளின் குழுவின் ஆட்சியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை“ என்றார்.
ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய இது குறித்து ருவிற்றரில் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். வண்ணத்துப்பூச்சிகள் என சிங்களத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களையே இரட்டை அர்த்தத்தில் குறிப்பிடுவதாக சுட்டிக்காட்டினார்.
இதை தொடர்ந்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.