புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 நவ., 2018

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ; பிரதமர் ரணில் விக்கிரமசிங்க - தேசிய தீபாவளி நிகழ்வில் மாற்றி மாற்றி சொன்ன டக்ளஸ்

ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தலைமையில் தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வு நேற்று ஜனாதிபதி
மாளிகையில் நடைபெற்றது.
daglos.jpg
இதில் பிரதமர் மஹிந்த ரஜபக்ஷ, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மற்றும் சமயலத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இதில் முதலில் பேச அழைக்கப்பட்ட மீள்குடியேற்றும் மற்றும் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேச்சை ஆரம்பிக்க முன் ஜனாதிபதியை வரவேற்றார். அப்போது கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று விளித்தார். அரங்கமே சற்று புருவமுயற்ற உடனே சுதாரித்துக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்னிக்கவும் ('சொரி சொரி') என்று தன்னைத் திருத்திக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்றார்.
அதன்பிறகு பே்சசைத் தொடர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒவ்வொரு தீபாவிளப் பண்டிகையின்போதும் அடுத்த தீபாவளிக்குள் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என்று ஏமாற்றும் கூட்டமல்ல நாம். பொறுப்பேற்றால் அதன்படி செய்துகாட்டுவோம். 
நிலங்கள் மீட்கப்படவேண்டும். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். மக்கள் மீள்குடியேற்றப்படவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். மக்களை ஏமாற்றமாட்டோம். போதிய அரசியல் பலம் இல்லாதபோதும் நாம் அதில் இறங்கியிருக்கிறோம். எதிர்காலத்தில் மாற்றங்கள் வரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 
அதேபோல் நாம் பிரதமருடன் இணைந்து என்று சொல்ல வரும்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் என்று குறிப்பிட்டார். மீண்டும் அரங்கம் சற்று அதிர சுதாரித்துக்கொண்டு மீண்டும் மன்னிப்புகேட்டுவிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து என்று கூறி முடித்தார்